ADDED : அக் 24, 2024 02:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று (அக். 24) நள்ளிரவு டில்லி திரும்பினார்.
பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் கஸான் நகரில் இரு நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்க கடந்த 21-ம் தேதி ரஷ்யா சென்றார் பிரதமர் மோடி . அங்கு ரஷ்ய அதிபர் புடின், ஈரான் அதிபர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
நேற்று (அக்.,23) சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
பின்னர் நடந்த முக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.ரஷ்ய பயணம் நிறைவடைந்ததையடுத்து நள்ளிரவு டில்லி திரும்பினார்.