சபரி ஆசிரம நுாற்றாண்டு விழா; கேரள மாநில கவர்னர் பங்கேற்பு
சபரி ஆசிரம நுாற்றாண்டு விழா; கேரள மாநில கவர்னர் பங்கேற்பு
ADDED : செப் 30, 2024 11:32 PM
பாலக்காடு : பாலக்காடு அருகே, மகாத்மா காந்தி வந்து சென்ற, சபரி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில், இன்று நடக்கும் நிறைவு விழாவில், மாநில கவர்னர் பங்கேற்கிறார்.
கேரள மாநிலம், பாலக்காடு அககேத்தறை அருகே உள்ளது மகாத்மா காந்தி வந்து சென்று சபரி ஆசிரமம்.
இந்த ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா இன்று நிறைவு பெறுகிறது. இன்று, காலை 10:00 மணிக்கு ஆசிரமத்தின் கலையரங்கில் நடக்கும் நிகழ்ச்சியை, கேரள கவர்னர் ஆரீப் முகமதுகான் துவக்கி வைக்கிறார்.
ஹரிஜன் சேவக் சங்க மாநில தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். எம்.பி., ஸ்ரீகண்டன், எம்.எல்.ஏ., பிரபாகரன், அககேத்தறை ஊராட்சித் தலைவர் சுனிதா ஆகில் கலந்து கொள்கின்றார்.
நிகழ்ச்சியில், ஹரிஜன் சேவக் சங்க மாநிலத் தலைவர் கோபாலகிருஷ்ணன் எழுதிய 'மாற்றத்தின்டை வித்துகள்', 'காந்தியின் ஆசிரம பரீக்ஷணங்கள்' ஆகிய இரு நுால்களை, கவர்னர் ஆரீப் முகமதுகான் வெளியிடுகின்றார்.
நிகழ்ச்சியை ஒட்டி, ஹரிஜன் சேவக் சங்கத்தின் நவதி உற்சவமும் நிறைவு பெறுகிறது.
எம்.பி., நிதி, 50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட அருங்காட்சியகம் மற்றும் சபரி ஆசிரம நிறுவனர் கிருஷ்ணசாமியின் மனைவி ஈஸ்வரி அம்மாளின் பெயரில் கட்டப்பட்ட நுாலகத்தின் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
மாநில கலாசார துறையுடன் இணைந்து பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்த, 24 பேர் கொண்ட சுய உதவி குழு உருவாக்கப்பட்டு, அதன் செயல் ஆசிர மத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.
இத்தகவலை, ஆசிரம நிர்வாக குழு பொது செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ஜேக்கப், செயலாளர் தேவன் ஆகியோர் தெரிவித்தனர்.