சபரிமலை மகரவிளக்கு உற்ஸவம்: கட்டுப்பாட்டு அறை, உதவி மையம் நவ.16ல் பயன்பாட்டுக்கு வருகிறது
சபரிமலை மகரவிளக்கு உற்ஸவம்: கட்டுப்பாட்டு அறை, உதவி மையம் நவ.16ல் பயன்பாட்டுக்கு வருகிறது
ADDED : நவ 13, 2024 10:52 PM

மூணாறு ; சபரிமலை மண்டல, மகரவிளக்கு உற்ஸவத்தையொட்டி கட்டுப்பாட்டு அறைகள், உதவி மையம் நவ.16 முதல் பயன்பாட்டிற்கு வரும் என கேரளா இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு உற்ஸவம் நெருங்குவதால், இடுக்கி மாவட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு சேவை செய்யவும், ஏற்பாடுகளை முறைபடுத்தவும், புகார்களுக்கு தீர்வு காணும் வகையிலும் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படுகின்றன.
இடுக்கி கலெக்டர் அலுவலகம், மஞ்சுமலை கிராம நிர்வாக அலுவலகம்ஆகியவற்றில் 24 மணி நேரம் செயல் படும் வகையில் கட்டுப்பாட்டு அறை காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும் உதவி மையம் ஆகியவை நவ.16 முதல் பயன்பாட்டுக்கு வரும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இடுக்கி கலெக்டர் அலுவலகத்தில் (தொலைபேசி எண் 04862 - 232 242) பொறுப்பு அதிகாரி கூடுதல் மாவட்ட நீதிபதி ஷைஜூ பி.ஜேக்கப் (அலை பேசி எண் 94463 03036), மஞ்சுமலை கிராம நிர்வாகஅலுவலக பொறுப்பு அதிகாரி பீர்மேடு தாசில்தார் (அலைபேசி எண் 94470 23597), உதவி மையம் (மஞ்சுமலை கிராம நிர்வாக அலுவலகம் 04869 - 224 243, 85476 12909) ஆகியோர் தலைமையிலான குழுவை தொடர்பு கொண்டு பக்தர்கள் பயன்பெறலாம்.