ADDED : மார் 14, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.
இதுவரை கருவறையில் உள்ள அய்யப்பனை, பக்கவாட்டில் இருந்து சென்று, சில வினாடிகள் மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது. பக்தர்களின் இந்த குறையை போக்கும் வகையில், திருப்பதி மாடலில் பக்தர்களுக்கு தரிசன வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கொடி மரத்திலிருந்து, மூலவரை நேரடியாக பார்த்து தரிசிக்கும் வகையில், பாதை அமைக்கப்பட்டுள்ளது.