ADDED : ஜன 15, 2026 12:13 AM

இலங்கைக்கு, 40 ஆண்டுகளுக்கு முன் இந்திய அமைதிப்படையை அனுப்பிய அப்போதைய காங்., அரசின் முடிவு விவாதத்திற்குரியதாக இருக்கலாம். ஆனால், அந்தப் படையில் இருந்த நம் வீரர்களின் தியாகம் மரியாதைக்குரியது. அவர்களின் தியாகம் கவுரவிக்கப்பட வேண்டும். முந்தைய அரசுகள் இதை செய்யத் தவறிவிட்டன.
ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,
உஷாராக இருக்க வேண்டும்!
கலைஞர்களை மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. அவர்களுக்கு கலையே மதம். கலை என்பது வெறும் மகிழ்ச்சிக்கானது மட்டுமல்ல, அது வகுப்புவாதத்திற்கும், பிரிவினைக்கும் எதிரான ஒரு வலிமையான போராட்டக் கருவி. கலை, கலைஞர்களை மத ரீதியாக பார்ப்பவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்.
பினராயி விஜயன் கேரள முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூ.,
உத்தவ் உடன் சேர மாட்டோம்!
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், ஆளும் 'மஹாயுதி' கூட்டணியே வெற்றி பெறும். எதிர் காலத்தில், உத்தவ் தாக்கரே உடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம். அவரது தயவு எங்களுக்கு தேவையில்லை. அவர் எதிரி அல்ல. நேரம் கிடைத்தால், அவருடன் தேநீர் அருந்துவேன். ஆனால் கூட்டணி வைக்க மாட்டேன்.
தேவேந்திர பட்னவிஸ் மஹாராஷ்டிர முதல்வர், பா.ஜ.,

