67 ஐ.ஏ.எஸ்., 63 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு சம்பளம் உயர்வு
67 ஐ.ஏ.எஸ்., 63 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு சம்பளம் உயர்வு
ADDED : ஜன 02, 2025 05:46 AM
பெங்களூரு: புத்தாண்டு பரிசாக 67 ஐ.ஏ.எஸ்., - 63 ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்தி, கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடக அரசு புத்தாண்டு பரிசாக மாநிலத்தின் மூத்த, இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, சம்பளத்தை உயர்த்தி உள்ளது. அதன்படி தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், ஆசியன் வளர்ச்சி வங்கியில் நிர்வாக இயக்குனராக உள்ள பொன்னுசாமி, கர்நாடக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனரும், தமிழருமான வெங்கடேஷ், தமிழ் அதிகாரியான பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குனர் ராமசந்திரன், கர்நாடக அரசின் தலைமை செயலரின் சிறப்பு அதிகாரியும், தமிழருமான பூவிதா உட்பட 67 பேருக்கு, அவர்கள் வேலைக்கு சேர்ந்த ஆண்டின் அடிப்படையில், சம்பளம் உயர்ந்து உள்ளது.
இதுபோல தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரியும், தேசிய மனித உரிமைகள் ஆணைய மூத்த கண்காணிப்பாளருமான இலக்கியா கருணாகரன் உட்பட 63 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சம்பளமும் உயர்த்தப்பட்டு உள்ளது.