ADDED : பிப் 20, 2025 06:42 AM

தங்கவயல்: நகராட்சியின் ஈ.டி.பிளாக் வார்டில் மலையாளி மைதானம் அருகே புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை தங்கவயல் எம்.எல்.ஏ., ரூபகலா நேற்று திறந்து வைத்தார்.
மொத்தம், 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் இந்திரா காந்தி, துணைத் தலைவர் ஜெர்மன், ஆணையர் பவன் குமார், வார்டு கவுன்சிலர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
எம்.எல்.ஏ., ரூபகலா பேசியதாவது:
தங்கவயல் தொகுதியில் 113 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று கூட சீரில்லை. கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. அனைத்து அங்கன்வாடி மையங்களும் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன.
கட்டட உரிமையாளர்களுக்கு உரிய நாளில் வாடகைத் தொகையும் கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையில் அங்கன்வாடி மையங்கள், அரசுக்குச் சொந்தமாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
முதல் கட்டடமாக ஈ.டி. பிளாக் வார்டில் மாதிரி அங்கன்வாடி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர்கள் கல்வியறிவுக்கு ஏற்றபடி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பூங்கா அமைக்க திட்டமிடப்படும்.
தங்கவயல் தொகுதியில் குடிநீர், தெருவிளக்கு, சுகாதார தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. மக்கள் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.
இவ்வாறு அவர்கூறினார்.

