ADDED : பிப் 16, 2024 07:16 AM
புதுடில்லி: பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக சஞ்சய் குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வந்ததை தொடர்ந்து அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக சஞ்சய் குமார் ஜெயினை நியமனம் செய்து மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்தது.
உடனடியாக அமலுக்கு வரும் இந்த உத்தரவின்படி அவர் ஓய்வு பெறும் தேதியான 2026, டிச., 31 வரை அவர் பொறுப்பில் இருப்பார் என ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜெயின் வடக்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வர்த்தக மேலாளராக பணியாற்றி வந்த நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சி.எம்.டி., எனப்படும் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக பொறுப்பேற்றார்.
கடந்த 1990ம் ஆண்டு பிரிவை சேர்ந்த இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை அதிகாரியான இவர், சி.ஏ., எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பை முடித்து ரயில்வேயில் சிறந்த சேவை ஆற்றியுள்ளார்.