குடும்பத்தினர் போட்டியில்லை சதீஷ் ஜார்கிஹோளி உறுதி
குடும்பத்தினர் போட்டியில்லை சதீஷ் ஜார்கிஹோளி உறுதி
ADDED : பிப் 26, 2024 07:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: ''சிக்கோடி தொகுதிக்கு மூன்று பேர், பெலகாவிக்கு இரண்டு பேர் பெயர் இறுதி செய்யப்பட்டு, கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. என் குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை,'' என பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெலகாவியின் கானாபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சிக்கோடி தொகுதிக்கு மூன்று பேர், பெலகாவிக்கு இருவர் பெயரும் இறுதி செய்யப்பட்டு, கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்வது, கட்சி தலைவர்களின் கையில் உள்ளது.
என் மகள் பிரியங்கா உட்பட எங்கள் குடும்பத்தை சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.
பெலகாவி, சிக்கோடியில் உள்ளூரில் பிரபலமானவர்கள் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

