தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வாடிக்கையாளர்களின் தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு:

வாடிக்கையாளர்களின் தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு:

வாடிக்கையாளர்களின் தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு:


UPDATED : அக் 21, 2026 06:42 PM

ADDED : அக் 21, 2026 02:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 06:42 PM ADDED : அக் 21, 2026 02:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததை அடுத்து, சைபர் பாதுகாப்பு பிரிவு விசாரணையை வங்கி தொடங்கியுள்ளது.

அக். 16ல், வாடிக்கையாளர்களின் தரவுகள் டார்க் வெப்பில் வெளியாகியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து, இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழு உள்ளிட்ட சைபர் பாதுகாப்பு முகமைகள் வங்கி நிர்வாகத்தை எச்சரித்தன.

டார்க் வெப்பில் கண்டறியப்பட்ட சுமார் 3.75 லட்சம் பதிவுகளை ஆய்வு செய்ததில், முதற்கட்டமாக 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்தது உறுதியானது.

வாடிக்கையாளர்களின் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, பாலினம், இ-மெயில், வீட்டு முகவரி, வாடிக்கையாளர் அடையாள எண் மற்றும் கடன் தொடர்பான விவரங்கள் போன்றவை கசிந்ததை வங்கி உறுதி செய்தது. தகவல்கள் எங்கு இருந்து கசிந்தன, அவற்றின் உண்மைத்தன்மை என்ன, வேறு எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இதற்காக, முன்னணி தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியையும் வங்கி நாடியுள்ளது.

எஸ்பிஐ விளக்கம்


இது தொடர்பாக எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது. குறைந்தளவு வாடிக்கையாளர்களின் தகவல் மட்டுமே கசிந்தது. அவர்களின் நலனை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டார்க் வெப்பில் கிடைத்த சுமார் 3,75,000 ஆவணங்களில் முதல் கட்டமாக ஆய்வு செய்தபோது, ​​தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களைக் கொண்ட 3,897 வாடிக்கையாளர் தகவல்களை கண்டறிந்தோம். விரிவான விசாரணை நடக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எச்.டி.எப்.சி., வங்கியின் ரகசிய தகவல்கள் கசிவு: அதிகாரிகள் மீது நடவடிக்கை

எச்டிஎப்சி வங்கியின் முக்கிய வர்த்தக திட்டங்கள் மற்றும் பங்குச்சந்தை தொடர்பான ரகசிய விவரங்களை வெளியிட்டதாக, வங்கியின் இரண்டு உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கியின் ரகசிய தகவல்கள் கசிவதாக சில நிர்வாகிகள் சந்தேகம் எழுப்பியதை தொடர்ந்து, உள்விசாரணை நடத்தப்பட்டது. இதில், உயர் பொறுப்பில் இருக்கும் இரு முக்கிய அதிகாரிகள், வங்கியின் ரகசிய வணிக உத்திகளையும் சந்தை நிலவர தகவல்களையும் வெளியாட்களுக்கு பகிர்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கசிந்த தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கி நிர்வாகம், விசாரணை முழுமையாக முடிந்த பிறகு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us