ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பால் கனமழை, பலத்த சேதம்: ரம்பனில் நாளை விடுமுறை
ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பால் கனமழை, பலத்த சேதம்: ரம்பனில் நாளை விடுமுறை
ADDED : ஏப் 20, 2025 09:58 PM

ஸ்ரீநகர்; ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட மழை, நிலச்சரிவு எதிரொலியாக ரம்பன் மாவட்டத்தில் கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்கு நாளை (ஏப்.21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ரம்பன் மாவட்டத்தில் இன்று (ஏப்.20) மேக வெடிப்பு ஏற்பட்டது. அதன் எதிரொலியாக பலத்த மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. மழைக்கு 3 பேர் பலியாகினர்.
ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாக கட்டடங்கள் சேதம் அடைந்தன. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில்,மேக வெடிப்பு காரணமாக நாளை(ஏப்.21) ரம்பன் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைவரும் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

