பதவியை பிடிக்க போட்டி!
கர்நாடகாவுல ஆட்சியில இருக்குற, கை கட்சிக்காரங்க ஐந்து வாக்குறுதிய கொடுத்து, ஆட்சிக்கு வந்தாங்க. சொன்னபடி ஐந்து வாக்குறுதியையும் நிறைவேற்றி இருக்காங்க. ஆனா இந்த வாக்குறுதித் திட்டங்கள், மக்கள்கிட்ட சரியா போகலன்னு, புகார் எழுந்து இருக்கு. இதனால வாக்குறுதித் திட்டங்கள நிறைவேற்ற, மாவட்ட, தாலுகா அளவுல 11,000 பேர நியமிக்க போறாங்களாம். இதுக்கு மாசம்தோறும் கவுரவ தொகையும் கொடுக்குறதா சொல்லி இருக்காங்க. இதனால அந்த பதவியை பிடிக்க, கை கட்சிக்குள்ள கடும் போட்டி தொடங்கி இருக்கு.
மீண்டும் 'சீட்' கிடைக்குமா?
கர்நாடகா தாமரை கட்சி தலைவரோட அண்ணன், பாக்கு அதிகம் விளையுற மாவட்ட, தலைநகர் தொகுதி எம்.பி.,யாக இருக்காரு. இவர் மேல பெரிசா எந்த புகாரும் இல்ல. ஆனா வர்ற தேர்தல்ல, அவருக்கு 'சீட்' கொடுக்க, கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி இருக்கு. தம்பிக்கு தலைவரு பதவி, அண்ணனுக்கு எம்.பி., 'சீட்' டான்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சி இருக்காங்க. இதனால, எம்.பி., மீண்டும் 'சீட்' கிடைக்குமான்னு உறுதியா தெரியல. ஆனாலும் அண்ணனுக்கு மறுபடியும் வாய்ப்பு தரணும்னு, தம்பி, கட்சி மேலிடத்துகிட்ட கோரிக்கை வைச்சு இருக்காறாம்.
துளிர்விட்ட ஆசை!
லோக்சபா தேர்தல்ல போட்டியிடவே மாட்டேன்னு சொல்லிட்டு வந்தாரு, புல்லுக்கட்டு குமரண்ணரு. ஆனா அவரோட பிடிவாதத்த கரைக்க, புல்லுக்கட்டு கட்சியில ஒரு கோஷ்டி தீவிரமா, வேலை செஞ்சிட்டு வர்றாங்க. தலைவரே, நீங்க போட்டியிட்டு எம்.பி., ஆகணும். உங்கள மத்திய அமைச்சரா நாங்க பார்க்கணும்னு, உசுப்பேத்தி விடுறாங்களாம்.
இதனால, லோக்சபா தேர்தல்ல போட்டியிட்டு ஜெயிச்சி, மத்திய அமைச்சர் ஆகிறலாம்னு, குமரண்ணருக்கும் லேசா ஆசை துளிர்விட்டு இருக்காம். 'பீஸ்' போகாம இருந்தா சரி தான்.