பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை; துப்பாக்கிகள், ஹெராயின் பறிமுதல்
பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை; துப்பாக்கிகள், ஹெராயின் பறிமுதல்
UPDATED : ஜூலை 24, 2025 05:10 PM
ADDED : ஜூலை 24, 2025 05:09 PM

சண்டிகர்: பஞ்சாபில் பாகிஸ்தானின் 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது. 3 கைத் துப்பாக்கிகள், 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், ட்ரோன்கள் பறந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அமிர்தசரஸில் பாகிஸ்தானின் ஐந்து டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
அட்டாரி கிராமத்தில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அத்துடன் 3 கைத் துப்பாக்கிகள், 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள தால் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு நெல் வயலில் இருந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பாகங்கள் மற்றும் ஆயுதங்களை மீட்டனர்.
பஞ்சாபில் பாகிஸ்தானின் 6 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால், மிகப்பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.