தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/போனில் பாதுகாப்பு தொடர்பான தகவல்: ஹிமாச்சல் இளைஞர் கைது

போனில் பாதுகாப்பு தொடர்பான தகவல்: ஹிமாச்சல் இளைஞர் கைது

போனில் பாதுகாப்பு தொடர்பான தகவல்: ஹிமாச்சல் இளைஞர் கைது


ADDED : மே 29, 2025 03:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2025 03:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிம்லா: நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களை மொபைல் போனில் வைத்திருந்த இளைஞரை ஹிமாச்சல் போலீசார் கைது செய்தனர்.

எல்லை மாநிலமான ஹிமாச்சல பிரதேசம், உளவு மற்றும் தேசத்துரோக செயல்பாடுகளில் சிலர் ஈடுபடுவதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் சில இளைஞர்கள், பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் பெற முயற்சிப்பதாகவும் புகார்கள் எழுந்த நிலையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் நடத்ததிய சோதனையில், 20 வயது இளைஞர் வைத்திருந்த செல்போனில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் தகவல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கைது செய்யப்பட்ட இளைஞர், ஹிமாச்சல் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள சுகாஹரைச் சேர்ந்த அபிஷேக் பரத்வாஜ் என அடையாளம் காணப்பட்டது. அபிஷே க் கல்லுாரியில் பாதியில் நிறுத்தப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இளைஞர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 152 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உளவுத்துறையினர்,பல நாட்களாக சந்தேக இளைஞரை தீவிரமாக கண்காணித்தும், தகவல்களை சேகரித்தனர். இன்று துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி, தாசசீபா தலைமையிலான சிறப்புக்குழு குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணைக்காக, அவர் டெஹ்ரா காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us