இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
ADDED : பிப் 20, 2025 06:48 AM

தேவனஹள்ளி: பெங்களூரில் இருந்து விமானத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற, 2.12 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த இருந்த பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
மூன்று பயணியரின் உடைமைகளில் இருந்து 2.12 கோடி ரூபாய் மதிப்பிலான, வெளிநாட்டு கரன்சி கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி அமலாக்கத்துறைக்கு, விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
அமலாக்கத்துறையினர், மூன்று பயணியரை கைது செய்து 2.12 கோடி வெளிநாட்டு கரன்சியை பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் இலங்கையின் விமல்ராஜ் துரை சிங்கம், திலீபன் ஜெயந்திகுமார், வீரகுமார் என்பது தெரிந்தது.

