sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சீனியர் வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்பது கட்டாயம்: பி.சி.சி.ஐ., நிபந்தனை

/

சீனியர் வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்பது கட்டாயம்: பி.சி.சி.ஐ., நிபந்தனை

சீனியர் வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்பது கட்டாயம்: பி.சி.சி.ஐ., நிபந்தனை

சீனியர் வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்பது கட்டாயம்: பி.சி.சி.ஐ., நிபந்தனை

5


ADDED : ஜன 17, 2025 10:14 AM

Google News

ADDED : ஜன 17, 2025 10:14 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து பி.சி.சி.ஐ., உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதன்பிறகு நடந்த கிரிக்கெட் தொடர்களில் தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நியூசி., அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்தது, பார்டர் -கவாஸ்கர் தொடரை ஆஸி.,யிடம் பறிகொடுத்தது உள்ளிட்ட தோல்விகளால் இந்திய ரசிகர்கள் துவண்டுபோயுள்ளனர். மேலும், கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்படிபட்ட சூழலில், அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. எனவே, இந்திய அணி வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பி.சி.சி.ஐ.,உள்ளது. ஆதலால், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சில நிபந்தனைகளை பி.சி.சி.ஐ., விதித்துள்ளது.

* இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அனைத்து வீரர்களும் (சீனியர்கள் உள்பட) உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் கட்டாயம் விளையாட வேண்டும்.

* போட்டிகளின் போது அனைத்து வீரர்களும், அணி நிர்வாகத்தின் பயணக் கட்டுப்பாடுகளுக்குட்பட்டே இருக்க வேண்டும். தனியாக பயணிக்க கூடாது

* குறிப்பிட்ட அளவு லக்கேஜ்களை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். அதிக லக்கேஜ்களை எடுத்து வரவேண்டுமானால், அதற்கான செலவை அந்தந்த வீரர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, வெளிநாடுகளில் (30 நாட்களுக்கு மேலாக) கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் போது 150 கிலோ வரையிலான லக்கேஜ்களை எடுத்து வர வீரர்களுக்கு அனுமதி. வெளிநாடு தொடர்கள் (30 நாட்களுக்கு குறைவாக) மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் வீரர்கள் 120 கிலோ லக்கேஜ்களை எடுத்து வரலாம்.

* மேலாளர் மற்றும் சமையல் உதவியாளர்களை வீரர்கள் தங்களுடன் அழைத்து வரக் கூடாது

* பயிற்சியோ, போட்டியோ முன்கூட்டியே முடிந்தால், வீரர்கள் உடனடியாக கிளம்பக் கூடாது; அனைத்து வீரர்களுடன் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்.

* போட்டிகள் நடக்கும் காலத்தில் தனிப்பட்ட விளம்பர படப்பிடிப்புகளில் பங்கேற்க கூடாது

45 நாட்களுக்கு மேலாக வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்கும் வீரர்களுடன் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள், இரு வாரங்களுக்கு ஒருமுறை தங்கலாம். அவர்களின் தங்கும் செலவை அணி நிர்வாகம் ஏற்கும். பிற செலவுகளை வீரர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

* பி.சி.சி.ஐ.,யின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் சூட்டிங்கில் அனைத்து வீரர்களும் பங்கேற்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us