வாரத்தின் தொடக்க நாளில் சரிவுடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்!
வாரத்தின் தொடக்க நாளில் சரிவுடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்!
ADDED : மே 19, 2025 06:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: வாரத்தின் தொடக்க நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
பங்குச்சந்தை வர்த்தகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் சரிந்தது. முடிவில் 82,259 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இன்றைய வர்த்தகத்தில் இது 0.33 சதவீதம் சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்ற 30 முதல் தர பங்குகளில் 12 நிறுவன பங்குகள் உயர்வை கண்டன. எஞ்சிய 18 நிறுவன பங்குகளில் சரிவு காணப்பட்டன.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிப்டி குறியீட்டெண் 74 புள்ளிகள் சரிந்து 24,945 ஆக நிறைவடைந்தது. தொடக்கத்தில் 25,005 என்ற புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கி 25,062 என்ற புள்ளிகளில் உயர்ந்தது. பின்னர் வணிக நேர முடிவில் 24,945 ஆக இருந்தது. மொத்த வணிக சரிவு 0.30 சதவீதம் ஆகும்.