செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: மே 15க்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: மே 15க்கு ஒத்திவைப்பு
ADDED : மே 06, 2024 01:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (மே 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது.
இருப்பினும் அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணையை தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம். அதன்படி, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம் விசாரணை நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.