ADDED : அக் 27, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மீது பல்வேறு கொலை, அடிதடி, ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளன. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையிலும், அவர் மூளையாகச் செயல்பட்டுள்ளார். தற்போது, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022 செப்டம்பரில், சிறையில் இருந்தபடி தாதா லாரன்ஸ் பிஷ்னோய் அளித்த நேர்காணல் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரித்தனர்.
விசாரணையில், பஞ்சாபில் உள்ள சிறை ஒன்றில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, தாதா லாரன்ஸ் பிஷ்னோய் நேர்காணல் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் இரு டி.எஸ்.பி.,க்கள் உட்பட ஏழு போலீசாரை சஸ்பெண்ட் செய்து, பஞ்சாப் அரசு நேற்று உத்தரவிட்டது.