3 மாவட்டங்களில் கடும் குளிர் வானிலை மையம் எச்சரிக்கை
3 மாவட்டங்களில் கடும் குளிர் வானிலை மையம் எச்சரிக்கை
ADDED : டிச 17, 2024 04:55 AM
பெங்களூரு: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பெங்களூரு மையம் விடுத்துள்ள அறிக்கை:
வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. அதேவேளையில், வங்க கடலின் தெற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளதால், அடுத்த மூன்று நாட்களுக்கு பீதர், விஜயபுரா, கலபுரகி ஆகிய மாவட்டங்களில், கடும் குளிர் வாட்டும் என்பதால், 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் இம்மூன்று மாவட்டங்களிலும், இயல்பான அளவை விட, 6 முதல் 7 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் குறையும். இதே பகுதியில் உள்ள பாகல்கோட், ராய்ச்சூர், யாத்கிர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இங்கு இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் குறைவாக இருக்கும்.
இது தவிர, மற்ற மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு வறண்ட காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. பெங்களூரு நகரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தெளிவான வானம் காணப்படும். சில இடங்களில் காலை நேரத்தில் அடர்ந்த பனிமூட்டம் இருக்கும். அதிகபட்சமாக 25 டிகிரி செல்ஷியஸ், குறைந்த பட்சம் 15 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் இருக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

