கவர்னர் மீது பாலியல் புகார்: பா.ஜ.,வினருக்கு மம்தா கேள்வி
கவர்னர் மீது பாலியல் புகார்: பா.ஜ.,வினருக்கு மம்தா கேள்வி
ADDED : மே 03, 2024 08:16 PM

கோல்கட்டா: சந்தேஷ்காலி கலவரம் குறித்து அலறும் பா.ஜ.,வினர் கவர்னர் மீதான பாலியல் புகாருக்கு என்ன பதில் சொல்ல போகின்றனர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தற்காலிக பெண் பணியாளர் அளித்த புகாரை அடுத்து, கவர்னர் மாளிகைக்குள் போலீஸ் நுழைய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றி மேற்குவங்க ஆளும் திரிணமுல் காங்., முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது,
கவர்னர் மாளிகையில் பணியாற்றிய இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பெண் கண்ணீர் வடிப்பதை பார்த்து, என் இதயமே உடைந்து விட்டது. சந்தேஷ்காலி கலவரம் பற்றி அலறும் பா.ஜ.,வினர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர். மேற்கு வங்கத்துக்கு வந்த பிரதமர், இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.