பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பஞ்சாபில் பாதிரியார் மீது வழக்கு
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பஞ்சாபில் பாதிரியார் மீது வழக்கு
ADDED : மார் 02, 2025 06:31 PM

கபூர்தலா: பஞ்சாபில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாதிரியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள கபூர்தலாவில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு ஒரு பெண், கடந்த 2017 அக்., முதல் சென்று வருகிறார். அந்த தேவாலயத்தில் உள்ள பாதிரியார் பஜிந்தர் சிங், அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதை மிகவும் தாமதமாக அறிந்த பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிந்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
இந்த சம்பவம் கடந்த பிப்.28 ஆம் தேதி நடந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தற்போது வயது 22 ஆகிறது. பாதிரியார் பஜிந்தர் சிங் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்.
பாதிரியார் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354 டி (பின்தொடர்தல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்கொண்டு விசாரணை நடக்கிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.