sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பத்தத ராஷிபெட்டாவுக்கு வார இறுதியில் போகலாமா?

/

பத்தத ராஷிபெட்டாவுக்கு வார இறுதியில் போகலாமா?

பத்தத ராஷிபெட்டாவுக்கு வார இறுதியில் போகலாமா?

பத்தத ராஷிபெட்டாவுக்கு வார இறுதியில் போகலாமா?


ADDED : பிப் 22, 2024 07:23 AM

Google News

ADDED : பிப் 22, 2024 07:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடை காலம் துவங்கும் முன்பே, வெயில் தீயாக கொளுத்துகிறது. மக்களை வறுத்தெடுக்கிறது. எங்காவது சில்லென காற்று வீசும் மலைப் பிரதேசத்துக்குச் செல்ல மாட்டோமா என, மனமும், உடலும் ஏங்குவது சகஜம் தான். இப்படி ஏங்குவோரை வரவேற்க, பத்தத ராஷிபெட்டா மலை காத்திருக்கிறது. கோடை காலத்தில் பார்த்து ரசிக்க தகுதியானது.

பொதுவாக கோடை காலத்தில், பெரும்பாலான மலைகளில் பசுமை குறைந்திருக்கும். பொட்டல் காடாக காட்சியளிக்கும். மரங்கள், செடிகள் உலர்ந்து காணப்படும். மலை மீது ஏற முடியாது.

ஆனால், பத்தத ராஷிபெட்டா மலை, முற்றிலும் மாறுபட்டதாகும்.

குடகின், சோமவாரபேட்டில் பத்தத ராஷிபெட்டா மலை உள்ளது. இதற்கு முன்பு குடகின் பெரும்பாலான மலைப்பகுதிகளுக்கு, உள்ளூர் மக்கள் மட்டுமே வந்து சென்றனர். குறிப்பாக விவசாயிகள் ஆடு, மாடுகளை மேய்க்கச் சென்றனர்.

நாளடைவில் மலையை பற்றி கேள்விப்பட்டு, சுற்றுலா பயணியர் வர துவங்கினர். மலையின் அழகை போட்டோ, வீடியோவில் பதிவு செய்து, சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டதால், இதை பற்றி தெரிந்து கொண்டு அதிகமானோர் வருகின்றனர்.

உள்ளூர் மக்களிடம், மலையின் சிறப்புகள், வரலாற்றை தெரிந்து கொண்டு புத்தகம் எழுதினர். அதன்பின் டிரெக்கிங் செய்ய வரும் இளைஞர்கள், இளம்பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

தற்போது குடகின் மலைகள் பிரசித்தி பெற்றுள்ளன. சுற்றுலா பயணியரை ஈர்க்கின்றன. இவற்றில் பத்தத ராஷிபெட்டா மலையும் ஒன்றாகும். கோடை காலத்தில் மலை முழுதும், பழுப்பு நிறமாக மாறும்.

பத்தத ராஷிபெட்டா என்றால் கன்னட மொழியில், நெல் குவியல் என்ற அர்த்தமாகும். நெல் குவியலை கொட்டி வைத்தது போன்று, பழுப்பு நிறத்தில் தென்படுவதால் மலைக்கு இந்த பெயர் வந்ததாம். மலை மீது செடி, கொடிகள் நிறைந்த விசாலமான மைதானம் போன்று சமநிலையில் உள்ளது.

இங்கு புல் விளைகிறது. மழைக்காலத்தில் பெருமளவில் வளரும் என்பதால், டிசம்பர் வரை பச்சை பசேரென்று காணப்படும்.

கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால், மலையில் வளர்ந்த புற்கள் உலர்கின்றன. அப்போது இது பழுப்பு நிறமாக மாறும். தொலைவில் இருந்து பார்த்தால், நெல்லை பரப்பி வைத்ததைப் போன்று தென்படும். இதை காணவே சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.

ஒவ்வொரு மலைக்கு பின்னாலும், ஒரு கதை இருக்கும். இதற்கு பத்தத ராஷிபெட்டாவும் விதிவிலக்கு அல்ல.

தற்போது மலை உள்ள பகுதியில் விவசாயம் செய்த விவசாயி ஒருவர், விண்ணை தொடும் அளவுக்கு நெல்லை குவித்து வைக்க வேண்டும் என, விரும்பினார். இதற்காக சுற்றுப்புற கிராமத்தினர், உறவினர்களிடம் நெல் சேகரித்து குவித்து வைக்க துவங்கினார்.

இது விவசாயியின் தங்கைக்கு பிடிக்கவில்லை. அண்ணனின் முட்டாள்தனமான செயலை கண்டு கோபமடைந்தார். ஆனாலும் ஆண்டுதோறும், நெல்லை கொண்டு வந்து அண்ணனுக்கு கொடுத்தார். நெல் குவிக்கும் அண்ணனின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தது.

நாளடைவில் பொறுமையிழந்த தங்கை, 'நீ சேகரித்து வைத்த நெல் தீப்பிடித்து அழியட்டும், அங்கு செடி, கொடிகள் வளரட்டும்' என சபித்தாராம். தங்கையின் சாபம் பலித்து, நெல் தீப்பிடித்து எரிந்து, செடிகொடிகள் வளர்ந்ததாம்.

இந்த சாபத்தால் மலையில், இப்போதும் புற்கள், செடிகள் மட்டுமே அதிகம் வளர்வதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இங்கு இயற்கை அழகு ஏராளமாக கொட்டிக் கிடக்கிறது. மலையின் மேற் பகுதிக்கு கால்நடையாக செல்ல வேண்டும்.

நடந்து செல்வதால் எந்த சோர்வும் ஏற்படாது. ஏனென்றால் மரம், செடி, கொடிகளுக்கு நடுவில் நடப்பதால் குளிர்ச்சியாக இருக்கும்.

மலை உச்சியில் நின்று பார்த்தால், மனதை மயக்கும் இயற்கை காட்சிகள் தென்படும். விண்ணை தொடும் வகையில், வரிசையாக நின்றுள்ள மலைகள், அவற்றின் நடுவில் வயல், காப்பி தோட்டங்கள் தெரியும். வெயிலிலும் வீசும் குளிர்க்காற்றை அனுபவிக்கலாம்.

பத்தத ராஷிபெட்டா மலை அபாயமானது அல்ல. சிறார்கள், பெரியவர்கள் என, அனைவரும் மலை ஏறலாம். ஆனால் அடிப்படை வசதிகள் இல்லை.

சோமவாரபேட்டில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் பத்தத ராஷிபெட்டா மலை உள்ளது. ஷாந்தள்ளி வழியாக செல்லலாம். பஸ் வசதி உள்ளது. சொந்த வாகனத்திலும் செல்லலாம்

.- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us