ADDED : ஜன 11, 2025 11:21 PM

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் போது, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.,வுக்காக பணியாற்றினர். எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை உடைத்தனர். சரத் பவார் இதை ஆய்வு செய்திருக்கிறார். அவர் மிகவும் புத்திசாலி. அரசியலில் மற்றவர்களை புகழ்வது நல்ல பண்பு.
தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,
கூட்டணி உருவானது ஏன்?
இண்டி கூட்டணியை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என, கூட்டணி கட்சி தலைவர்கள் சொல்வதை ஏற்கிறேன். இதில் அனைவருக்கும் பொறுப்பு உண்டு. காங்கிரசுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. இந்த கூட்டணி லோக்சபா தேர்தலுக்காக உருவானது அல்ல. நாட்டின் ஆன்மாவை காக்க உருவாக்கப்பட்டது.
மணீஷ் திவாரி, லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்
தேசவிரோத சக்திகளின் ஆதரவு!
டில்லியில் உள்ள போலி வாக்காளர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களின் பெயர்கள், போலி ஆதார் மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்து வாயிலாக வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
சுதன்ஷு திரிவேதி, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

