ADDED : அக் 05, 2024 05:09 AM

அவல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். பாலில் அவலை ஊறவைத்து சாப்பிடுவது தனி சுவை. சிலருக்கு அவல் உப்புமா, இனிப்பு அவல் செய்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அவலில் பாயாசம் செய்தும்அசத்தலாம்.
பால் பாயசம், சேமியா பாயசம், ஜவ்வரிசி பாயசம், பாசிப்பருப்பு பாயசம் என, பல வகை பாயசம் இருக்கலாம்.
ஆனால், அவலில் பாயாசம் செய்வது தனி சுவையாகவும், மிகவும் எளிதாகவும் இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான அளவு அவல் எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் நன்கு கழுவிக்கொள்ளவும். கழுவிய பின் தண்ணீரில் 10 நிமிடங்கள் அவலை ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு வெல்லம் போட்டு தண்ணீரில் கொதிக்க விட்டு பாகு காய்ச்சவும். பின், இன்னொரு பாத்திரத்தில் தேவையான அளவு நெய், முந்திரி, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், முதலில் தண்ணீரில் ஊற வைத்த அவலையும், வெல்லப் பாகையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பத்து நிமிடத்தில் ஆவலாக சாப்பிடும் அவல் பாயசம் தயார். - நமது நிருபர் -