ஷிண்டே சிவசேனா தலைவரின் மகன் ஓட்டிய கார் மோதி பெண் பலி
ஷிண்டே சிவசேனா தலைவரின் மகன் ஓட்டிய கார் மோதி பெண் பலி
ADDED : ஜூலை 07, 2024 05:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மும்பையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த தலைவர் ஒருவரின் மகன் ஓட்டிய கார் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மும்பையின் வோர்லி பகுதியில் இன்று(ஜூலை 07) காலை அதிவேகமாக சென்ற சொகுசு கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது. அதில் பயணித்த பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். அதில் படுகாயமடைந்த அந்த பெண் உயிரிழந்தார். காரை ஓட்டியவர் தப்பிச் சென்றார். போலீசார் விசாரணையில் காரை ஓட்டியது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் பல்கர் மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ஷா மகன், மிஹிர்ஷா என்பது தெரியவந்தது. இதனையடுத்து மிஹிர் ஷாவை தீவிரமாக தேடி வரும் போலீசார் ராஜேஷ் ஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.