தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/குஜராத்தில் கைதான பயங்கரவாதிகள் பின்னணியால் அதிர்ச்சி!

குஜராத்தில் கைதான பயங்கரவாதிகள் பின்னணியால் அதிர்ச்சி!

குஜராத்தில் கைதான பயங்கரவாதிகள் பின்னணியால் அதிர்ச்சி!


UPDATED : ஜூலை 18, 2026 10:44 PM

ADDED : ஜூலை 18, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2026 10:44 PM ADDED : ஜூலை 18, 2026 09:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காந்திநகர்:குஜராத்தில் கைதான ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீரில் அதிநவீன ஆயுத பயிற்சி மற்றும் பயோ - கெமிக்கல் எனப்படும், உயிரி ரசாயனங்களை கொண்டு தாக்குதல் நடத்தும் பயிற்சி பெற்றவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைதாவதற்கு முன் ஒரு ஹோட்டலில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், எட்டு இடங்களில் வெடிகுண்டை வெடிக்க வைத்து சோதித்ததும் அம்பலமாகியுள்ளது.

குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படை அதிரடி சோதனை நடத்தியது. இரு கட்டங்களாக நடந்த இந்த சோதனையில் பயங்கரவாத வலையமைப்புடன் தொடர்பு கொண்ட 13 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து நடந்து வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படை வெளியிட்ட அறிக்கை:

அதிரடி சோதனையில் கைதான பயங்கரவாதிகள் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டவர்கள். அவர்களில், இரண்டு பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீரில் ஆயுத பயற்சி பெற்றவர்கள். ஏ.கே., 47 ரக துப்பாக்கி, பயோ - கெமிக்கல் எனப்படும் உயிரி ரசாயனங்களை கொண்டு தாக்குதல் நடத்த பயிற்சி பெற்றவர்கள்.

குறிப்பாக கார்களில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு என்ற ஆபத்தான நச்சு வாயுவை தயாரிக்கும் பயோ - கெமிக்கல் உத்திகளையும் கற்றுள்ளனர்.

வெளிநாட்டில் இருக்கும் அப்துல்லா என்பவரின் நேரடி வழிகாட்டுதல் கீழ், இந்த பயங்கரவாத கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. குண்டுகளை எவ்வாறு துல்லியமாக தயாரிப்பது என்பது உட்பட 40க்கும் மேற்பட்ட பயங்கரவாத உத்திகள் கற்று தரப்பட்டுள்ளன.

கழிவுப் பொருட்களை பூமியில் புதைத்து, நொதிக்க வைப்பதன் மூலம் வெளியாகும் பல்வேறு நச்சு வாயுக்களை இயற்கையான முறையில் சேகரித்து வெடிகுண்டு தயாரிக்கும் உத்திகளும் அதில் அடங்கும்.

உள்ளூரில் தங்கள் பயங்கரவாத வலையமைப்பை ஒருங்கிணைக்க, குஜராத்தின் வதோதராவுக்கு சென்று அங்குள்ள ஒரு காஷ்மீரி இளைஞரையும் தொடர்பு கொண்டுள்ளனர்.

இவர்கள் வெறும் சதித் திட்டம் தீட்டுவதோடு நிறுத்தாமல், எட்டு இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து சோதித்து பார்த்துள்ளனர்.

இந்த சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு தயாரிக்க உதவும் சோடியம் பாஸ்பேட், மின்சார ஒயர்களை, பொது குப்பை தொட்டிகளில் வீசியுள்ளனர். அதனை தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றி, தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

வெளிநாட்டில் இருந்த அப்துல்லா மூலம் இவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம் கைமாறி இருக்கிறது. அந்த பணத்தில் உளவு பார்ப்பதற்காக கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கியுள்ளனர். கைது செய்யப்படும் முன், ஆமதாபாதில் உள்ள ஒரு திறந்தவெளி ஹோட்டல் மீது தாக்குதல் நடத்த நோட்டமிட்டுள்ளனர்.

கைதான பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து 43 ஜிஹாதி புத்தகங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த பயங்கரவாத குழுவின் முக்கிய சதிகாரனாக கருதப்படும் அமீன் ஷேரா, காடியாசான் என்ற பகுதியில் உள்ள மதரஸாவுக்கு சென்று உள்ளூர் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்ற முயற்சித்துள்ளார். இதற்காக ஜிஹாதி புத்தகங்கள், டிஜிட்டல் ஆவணங்களை அவர்களிடம் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us