ADDED : ஆக 03, 2025 02:27 AM
புதுடில்லி,:கடையை காலி செய்வது தொடர்பான விவகாரத்தில், கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டவர்களை போலீசார் தேடுகின்றனர்.
தென்கிழக்கு டில்லி நிஜாமுதீனில் பர்ஹான், 32, அவருடைய சகோதரர்கள் வாசிம், 33, மற்றும் அப்துல் காலித், 30, ஆகியோர் இணைந்து, 'குயிப்லா பெர்பியூம்ஸ்' என்ற நறுமண பொருட்கள் விற்கும் கடை நடத்துகின்றனர்.
இந்தச் சகோதரர் களின் கடைகளில் ஒன்றில் வாடகைக்கு இருந்த எஹ்சானை, கடையை காலி செய்யுமாறு கூறியிருந்தனர். ஆனால், அவர் கடையை காலி செய்ய மறுத்தார். நேற்று முன் தினம் இரவு நண்பர்களுடன் வந்த எஹ்சான், பர்ஹானுடன் கடும் வாக்குவாதம் செய்தார்.
விவகாரம் முற்றிய நிலையில், எஹ்சானுடன் வந்திருந்தவர்கள், பர்ஹான் மீது துப்பாக்கியால் சுட்டனர். காலில் குண்டு பாய்ந்து விழுந்த பர்ஹான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, எஹ்சான் மற்றும் அவரது நண்பர்களை தேடுகின்றனர்.