ADDED : நவ 06, 2024 06:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீரா பாக்: டில்லியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடை மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மீரா பாக் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். பாஸ்சிம் விஹார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.
சம்பவ இடத்தைச் சுற்றி இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.