ADDED : ஜன 20, 2025 06:50 AM
கோலார்: கோலார் நகரில் முகமூடி அணிந்து வந்த கும்பல் தொடர் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கோலார் நகரில் கடந்த 17, 18ம் தேதிகளில் மர்ம கும்பல் ஒன்று கடைகளின் ஷட்டர்களை உடைத்து, உள்ளே புகுந்து பல்லாயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர்.
ஸ்வீட் ஸ்டால், சலுான், மெடிக்கல் ஷாப், மொபைல் ஷாப், எலக்ட்ரானிக் ஷோ ரூம் ஆகியவற்றின் ஷட்டர்களை இரும்பு தடியால் உடைத்து உள்ளே புகுந்திருப்பது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கடைக்காரர்கள் கொடுத்த புகாரின்படி கோலார் நகர போலீஸ் மற்றும் கல்பட் போலீசார் விசாரிக்கின்றனர். கடைகளின் அருகேயுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.
அதில் திருடர்கள் தலையில் தொப்பி, முகமூடி அணிந்திருந்தனர். நம்பர் பிளேட் இல்லாத ஆக்டிவ் ஹோண்டா ஸ்கூட்டரில் வந்து, திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.