ADDED : ஆக 07, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:உச்ச நீதிமன்ற உத்தரவு படி, டில்லியின் சாந்தினி சவுக் பகுதியில் இருந்த 10 கடைகள் மூடப்பட்டன.
பாரம்பரியம் மிக்க அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையடுத்து, பத்து கடைகளை அடைக்க, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
அதையடுத்து, 3 - 4 கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். எட்டு கடைகளை, தாங்களாகவே மூடி, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு வர்த்தகர்கள் பணிந்தனர்.
மேலும், கடைகள் மூடப்பட்ட பகுதியில் எவ்வித குழப்பமும் ஏற்படாமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவலை, டில்லி சாந்தினி சவுக் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் சஞ்சீவ் பார்கவ் நேற்று கூறினார்.