மூச்சு திணறல்: தேவகவுடா மருத்துவமனையில் ‛‛அட்மிட்''
மூச்சு திணறல்: தேவகவுடா மருத்துவமனையில் ‛‛அட்மிட்''
ADDED : பிப் 16, 2024 08:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி மூத்த தலைவருமான தேவகவுடா,90 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த
15-ம் தேதி வீட்டில் ஒய்வில் இருந்த போது தேவகவுடாவுக்கு கடுமையான
காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டதால் உடல் சோர்வடைந்தார். நேற்று
திடீரென அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதையடுத்து பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிறப்பு
மருத்துவர் டாக்டர் சத்யநாராயணா என்பவர் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர்
தேவகவுடாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருவதாகவும் தற்போது
அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.