நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது... புலம்பித் தவிக்கிறார் டிரம்ப்!
நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது... புலம்பித் தவிக்கிறார் டிரம்ப்!
UPDATED : நவ 04, 2024 08:50 AM
ADDED : நவ 04, 2024 08:38 AM

வாஷிங்டன்: 'கடந்த 2020ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு வெள்ளை மாளிகைகையை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது' என்று அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வருத்தத்துடன் தெரிவித்தார்.
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (நவ., 5) நடைபெறுகிறது. தேர்தலில், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பிலும், முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, பென்சில் வேனியா தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் பேசியதாவது:
கடந்த 2020ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு வெள்ளை மாளிகைகையை விட்டு வெளியேறி இருக்கக் கூடாது. நான் வெளியேறிய அன்று நமது நாட்டின் எல்லை பாதுகாப்பாக இருந்தது. தேர்தல் நாளில் மக்களுக்கு சரியான நேரத்தில் உரையாற்றுவேன். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் நிற்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நாளை நடைபெறவுள்ள தேர்தலில் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக முக்கிய பகுதிகளில் ஓட்டுகளை மீண்டும் எண்ண வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தால், இறுதி முடிவு தெரிய பல நாட்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.