உணவு டெலிவரி ஊழியருக்கு கன்னடம் தெரிய வேண்டாமா; சமூக வலைதளத்தில் கிளம்பியது விவாதம்!
உணவு டெலிவரி ஊழியருக்கு கன்னடம் தெரிய வேண்டாமா; சமூக வலைதளத்தில் கிளம்பியது விவாதம்!
ADDED : செப் 15, 2024 08:39 AM

பெங்களூரு: உணவு வினியோகம் செய்ய வந்த ஸ்விக்கி ஊழியருக்கு கன்னடம் தெரியவில்லை என்று கூறி, பெண் ஒருவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா, பெங்களூருவை சேர்ந்த ரேகா என்ற பெண், 'ஸ்விக்கி ' ஆன்லைன் உணவு வினியோக நிறுவனம் மூலம் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளார். பிறகு, அவர் 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் கூறியுள்ளதாவது; பெங்களூரு கர்நாடகாவில் உள்ளதா அல்லது வேறு எங்காவது உள்ளதா? ஸ்விக்கி, உங்கள் ஊழியருக்கு கன்னடம் பேசவும் தெரியவில்லை. புரியவும் செய்யவில்லை. ஆங்கிலமும் தெரியாது. நாங்கள், எங்களது மண்ணில் அவரின் மொழியான ஹிந்தியை கற்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? இதுபோன்ற விஷயங்களை திணிப்பதை நிறுத்திவிட்டு, உங்கள் ஊழியருக்கு கன்னடம் தெரிந்து இருப்பதை உறுதி செய்யுங்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
உடனடியாக இந்த பதிவு ஆன்லைனில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 2.35 லட்சம் பார்வைகளை பெற்ற அந்த பதிவிற்கு, ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.