ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி; மீண்டும் மிரட்டிப் பார்க்கிறார் டிரம்ப்
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி; மீண்டும் மிரட்டிப் பார்க்கிறார் டிரம்ப்
UPDATED : அக் 20, 2025 09:10 AM
ADDED : அக் 20, 2025 09:02 AM

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பொருட்களை வாங்கும் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரிவிதிகளை விதித்து வருகிறார். அந்த வகையில், இந்தியா மீது 50 சதவீத கூடுதல் வரியை விதித்தார்.
இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்கள் வாங்குவதை நிறுத்தாவிட்டால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆனால் அவரது மிரட்டல்களை மத்திய அரசு பொருட்படுத்துவது இல்லை. இந்திய நலன்களைக் கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அது தொடரும் என்று மத்திய அரசு ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.