அமெரிக்கா பயணம்:தனிப்பட்ட பயணம் என்கிறார் சிவகுமார்
அமெரிக்கா பயணம்:தனிப்பட்ட பயணம் என்கிறார் சிவகுமார்
ADDED : செப் 08, 2024 10:20 PM

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வரான சிவகுமார் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளதாகவும், அங்கு தலைவர்கள் யாரையும் சந்திக்க வில்லை எனவும் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது குடும்பத்தாருடன் வெளிநாட்டு பயணமாக வாஷிங்டன் நகருக்கு செல்கிறேன். வரும் 15 ம் தேதி வரையில் அமெரிக்காவில் இருப்பேன். பத்திரிகையாளர்கள் கூறுவது போன்று பராக் ஓபாமா மற்றும் கமலா ஹாரிசை சந்திக்க வில்லை . இது எனது தனிப்பட்ட பயணம் என்றார். தொடர்ந்து இது சம்பந்தமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எழுதி உள்ள கடிதத்தையும் அவர் வெளியிட்டார்.
முன்னதாக காங்., தலைவர் ராகுல் மூன்று நாளாக டெக்ஸாஸ்-க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்றுள்ள ராகுல் டெக்ஸாஸ் பல்கலையில் உரையாற்றுகிறார். மேலும் வாஷிங்டன், டல்லாஸ் நகரங்களுக்கும் ராகுல் பயணி்க்க உள்ளார்.
இதனிடையே இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா கூறுகையில், ராகுலின் அமெரிக்கப் பயணம் அவரது உத்தியோகபூர்வ பயணம் இல்லை, மாறாக 'தனிப்பட்ட அளவில்' உள்ளது. என்று கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.