அமைச்சர் பதவி கிடைக்கும் சிவலிங்கே கவுடா நம்பிக்கை
அமைச்சர் பதவி கிடைக்கும் சிவலிங்கே கவுடா நம்பிக்கை
ADDED : ஜன 02, 2024 06:55 AM
ஹாசன்: அமைச்சர் பதவி அல்லது கார்ப்பரேஷன், வாரிய தலைவர் பதவியை எதிர்பார்க்கிறேன், என காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கேகவுடா தெரிவித்தார்.
ஹாசனில் நேற்று அவர் கூறியதாவது:
நல்ல அந்தஸ்து தரப்படும் என வாக்குறுதி அளித்து, காங்கிரசுக்கு என்னை அழைத்து வந்தனர். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரின் உத்தரவுபடி, நான் நடந்து கொள்கிறேன். இந்த வாரம் கார்ப்பரேஷன், வாரியங்கள் தலைவர் பதவிகள் நியமிக்கப்படலாம். என்ன நடக்கிறது என, பார்க்கலாம்.
அரசுக்கு இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் போது, அமைச்சர் பதவி வழங்குவதாக கூறியுள்ளனர். எனவே முதல்வர், துணை முதல்வர் சொற்படி கேட்கிறேன்.
லோக்சபா தேர்தலுக்கு பின், அரசு கவிழும் என பா.ஜ.,வினர் மன பிரம்மையில் உள்ளனர். அவர்கள் பகல் கனவு கண்டு, விழித்திருக்க வேண்டும். அரசு கவிழும் என்பது அவர்களின் கனவு.
இவ்வாறு அவர் கூறினார்.

