ADDED : மே 05, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லடேஹர்: ஜார்க்கண்டின் லடேஹர் மாவட்டத்தில் உள்ள சக்லா பஞ்சாயத்துக்கு உட்பட்ட டோரிசாட் கிராமத்தில், கனிமவள ஆய்வு நிறுவனத்தினர், நிலக்கரி ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த நக்சலைட்டுகள் சரமாரியாக சுட்டனர். மேலும் அங்கிருந்த இரு கார்கள், டிராக்டர்கள், லாரிகள் என ஆறு வாகனங்கள் மற்றும் இரு டிரில்லிங் மிஷன்களை தீ வைத்து எரித்து விட்டு தப்பினர்.
இது பற்றி அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கு ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதிக்கு சீல் வைத்த போலீசார், தாக்குதல் நடத்திய நக்சல்களை தேடி வருகின்றனர்.

