sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

விடைபெற்றார் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்!

/

விடைபெற்றார் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்!

விடைபெற்றார் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்!

விடைபெற்றார் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்!

13


ADDED : பிப் 16, 2026 09:24 PM

Google News

13

ADDED : பிப் 16, 2026 09:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்கதேசத்தில் புதிய அரசு பொறுப்பேற்கும் நிலையில், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருந்த முகமது யூனுஸ், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து விடை பெற்றார்.

வங்கதேசத்தில், 2024ம் ஆண்டு வெடித்த மாணவர் போராட்டத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து அந்நாட்டு உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக பதவியேற்றார்.

இந்திய விரோத மனநிலை கொண்ட யூனுஸ் பாகிஸ்தானுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சீர்குலைந்தது.

தற்போது நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் பிப்.17ம் தேதி புதிய பிரதமராக பதவியேற்கிறார்.

இதையடுத்து, தலைமை ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய முகமது யூனுஸ், தெஜ்கான் பகுதியில் உள்ள தலைமை ஆலோசகர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து விடை பெற்றார். பணியாற்றிய அனைவருடனும் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இதேபோல், வங்கதேச ராணுவ தலைவரும், யூனுசை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, இடைக்கால அரசின் பதவிக்காலத்தில் ராணுவத்தின் ஒத்துழைப்புக்கு, குறிப்பாக பொதுத் தேர்தலின் போது வழங்கிய ஆதரவுக்கு யூனுஸ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us