சாமரம் வீசும் சித்தராமையா பா.ஜ., தலைவர் ரவி பாய்ச்சல்
சாமரம் வீசும் சித்தராமையா பா.ஜ., தலைவர் ரவி பாய்ச்சல்
ADDED : அக் 24, 2024 12:33 AM

பெங்களூரு, : ''மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய முதல்வர் சித்தராமையா, ராணியின் பின்னே நின்று சாமரம் வீசும் பெண்களை போன்று, சோனியா பின்னால் நின்றுள்ளார்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் ரவி தெரிவித்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தொடர் மழையால் மக்களின் வாழ்க்கை வீதிக்கு வந்துள்ளது. மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை விட, சோனியாவை வரவேற்பதே முக்கியமாகிவிட்டது. இந்த அரசு, ஏன் இருக்க வேண்டும்? இருந்தும், இறந்ததை போன்று உள்ளது.
மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய முதல்வர் சித்தராமையா, ராணியின் பின்னே நின்று சாமரம் வீசும் பெண்களை போன்று, சோனியா பின்னால் நின்றுள்ளார்.
இப்போது சென்னப்பட்டணாவில், காங்., பலவீனமாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கு முன், 'நானே வேட்பாளர்' என, சிவகுமார் கூறி வந்தார். இப்போது மாற்றி உள்ளனர்.
சென்னப்பட்டணா குமாரசாமியின் தொகுதியாகும். எங்களால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. குமாரசாமி தான் வேட்பாளரை தீர்மானிக்க வேண்டும். யோகேஸ்வர் இப்போது எங்கள் கட்சியில் இல்லை. அவரை பற்றி பேசமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

