குமாரசாமியை விட சிறியவன்! காங்., - எம்.பி., சுரேஷ் ஒப்புதல்
குமாரசாமியை விட சிறியவன்! காங்., - எம்.பி., சுரேஷ் ஒப்புதல்
ADDED : மார் 15, 2024 10:29 PM

பெங்களூரு: ''முன்னாள் முதல்வர் குமாரசாமியை விட அரசியலில் நான் சிறியவன்,'' என, காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் ஒப்புக்கொண்டு உள்ளார்.
பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் அளித்த பேட்டி:
என்னை வீழ்த்துவற்காக புறப்பட்டுள்ள குமாரசாமி, யோகேஸ்வர், முனிரத்னாவை, பல ஆண்டுகளாக பார்த்துள்ளேன். என் பலமும், அவர்களின் பலமும் எனக்கு நன்கு தெரியும். குமாரசாமி முதல்வராக இருந்தவர். அரசியலில் அவரை விட நான் சிறியவன்.
பெங்களூரு ரூரலில் தேவகவுடா குடும்பம், சிவகுமார் குடும்பத்திற்கு இடையில், அரசியல் பராம்பரிய சண்டை நடக்கிறதா என்பதை மக்களை சொல்லட்டும். எதிர்க்கட்சிகளின் சின்னம், வேட்பாளர் பற்றி நான் கவலைப்படவில்லை.
கடந்த 11 ஆண்டுகள் செய்த வேலைக்கு, மக்களிடம் கூலி கேட்கிறேன். ம.ஜ.த., கட்சியின் சின்னம், ஒரு பெண் தலையில் புல்லுக்கட்டு சுமந்து செல்வது. பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்ததால், அந்த பெண் புல்லுக்கட்டை தலையில் இருந்து கீழே போட்டுவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

