ADDED : நவ 22, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜபல்பூர்,
மத்திய பிரதேசத்தில் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென பாம்பு சுற்றித் திரிந்ததால் பயணியர் அலறியடித்து, பக்கத்து பெட்டிகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள ராணி கமலாபதி நிலையத்தில் இருந்து ஜபல்பூர் வரை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
சமீபத்தில் இந்த ரயிலில் ஏராளமானோர் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது, லக்கேஜ் வைக்கும் பகுதியில் இருந்து ஒரு பாம்பு திடீரென தலைகீழாக தொங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணியர் அலறியடித்து பக்கத்து பெட்டிகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.
இது பற்றி அறிந்த மேற்கு மத்திய ரயில்வே நிர்வாகம், அந்த ரயிலை துாய்மைப்படுத்த உத்தரவிட்டது. ரயிலுக்குள் பாம்பு வந்தது எப்படி என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.