காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
ADDED : ஏப் 27, 2025 12:20 PM

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ரசூல் மக்ரே,45, சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ரசூல் மக்ரே,45, பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரசூல் மக்ரேயின் வயிறு மற்றும் இடது மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் யார் என்பது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடே கடும் கோபத்தில் உள்ளது. இந்த சூழலில் தற்போது சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.