சமூக ஆர்வலர் கங்கராஜுவிடம் 'முடா' வழக்கில் இன்று விசாரணை
சமூக ஆர்வலர் கங்கராஜுவிடம் 'முடா' வழக்கில் இன்று விசாரணை
ADDED : அக் 27, 2024 11:15 PM

மைசூரு: 'முடா' முறைகேடு தொடர்பாக, ஆவணங்களுடன் அலுவலகத்தில் ஆஜராகும்படி, சமூக ஆர்வலர் கங்கராஜுவுக்கு, அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகிறார்.
இது குறித்து, மைசூரில் அவர் நேற்று அளித்த பேட்டி
முடாவில் 14 மனைகள் தொடர்பான ஆவணங்கள், காணாமல் போயுள்ளது. இது குறித்து, அமலாக்கத் துறையில் நான் புகார் அளித்துள்ளேன். விசாரணை நடந்து வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களுடன், நாளை (இன்று) விசாரணைக்கு ஆஜராகும்படி, அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை தர நான் தயார். பெங்களூரின் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவேன். முடாவில் பல ஆவணங்கள் காணாமல் போயுள்ளன.
முடா முறைகேடு தொடர்பாக, லோக் ஆயுக்தாவும் விசாரணை நடத்துகிறது. லோக் ஆயுக்தா அதிகாரிகள், நிர்ணயித்த எல்லை வரை மட்டுமே, விசாரணை நடத்த முடியும். ஆனால் அமலாக்கத் துறையால் மட்டுமே, ஆழமாக விசாரிக்க முடியும். எனவே அங்கு புகார் அளித்தேன். விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிப்பேன். ஆவணங்களையும் வழங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.