வெள்ளி விழா கொண்டாட்டத்தில் சாப்ட்வேர் நிறுவன சிஇஓ உயிரிழப்பு
வெள்ளி விழா கொண்டாட்டத்தில் சாப்ட்வேர் நிறுவன சிஇஓ உயிரிழப்பு
ADDED : ஜன 20, 2024 04:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் வெள்ளி விழா நேற்று முன்தினம் நடந்தது.
விழாவில் அந்த நிறுவனத்தின் சிஇஓ சஞ்சய் ஷா(56) கலந்து கொண்டார். கொண்டாட்டத்தின் போது, மேடையில் இருந்த இரும்பு கூண்டிற்குள் சஞ்சய் ஷா, விஸ்வநாத் ராஜ் தட்லா என்பவரும் ஏறினர். அப்போது, அந்த கூண்டை தாங்கிய ஒரு பக்க இரும்புச் சங்கிலி உடைந்தது. இதனால் கூண்டு ஒரு பக்கம் கவிழ்ந்ததில் இருவரும் மேல் இருந்து, கிழே விழுந்தனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் ஷா உயிரிழந்தார். மற்றொவரை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.