ADDED : நவ 06, 2024 06:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சுதர்சன் முகாமில் என்.எஸ்.ஜி., வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
என்.எஸ்.ஜி., எனும் தேசிய பாதுகாப்பு முகமையின் முகாமில் நேற்று காலை நரேந்தர் சிங் பண்டாரி, 31, என்ற வீரர் இறந்து கிடந்தார். அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயம் இருந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் இருந்து சமீபத்தில் என்.எஸ்.ஜி.,க்கு தற்காலிகமாக பணிமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அவரது சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.