ADDED : அக் 11, 2025 11:32 PM
சாய்பாசா: ஜார்க்கண்டில் தடை செய்யப்பட்ட சி.பி.ஐ., மாவோயிஸ்ட் அமைப்பு கடந்த, 8ல் துவங்கி அக்.,15 வரை எதிர்ப்பு வாரம் கடைபிடிக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுதும் போலீசார் பாதுகாப்பை பலப் படுத்தியுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக 12 பட்டாலியான் சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், ஆயுதப்படை போலீசாரின், 20 குழுக்கள் மற்றும் ரிசர்வ் போலீசார் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, மேற்கு சிங்பும் மாவட்டத்தின் சரன்டா வனப்பகுதியில் இரு ஐ.இ.டி., எனப்படும், சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் நேற்று முன்தினம் வெடித்தன.
இதில் சிக்கி அசாமை சேர்ந்த சி.ஆர்.பி.எப்., தலைமை காவலர் மகேந்திர லஷ்கர் மற்றும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய மூவர் காயம் அடைந்தனர்.
மகேந்திர லஷ்கர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.