தந்தையை குத்தி கொன்ற மகன் கைது புத்திமதி கூறிய தந்தையை குத்தி கொன்ற மகன் கைது
தந்தையை குத்தி கொன்ற மகன் கைது புத்திமதி கூறிய தந்தையை குத்தி கொன்ற மகன் கைது
ADDED : பிப் 18, 2025 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திகளரபாளையா: மது பழக்கத்தை கைவிட்டு, பணிக்குச் செல்லுமாறு கூறிய தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, திகளரபாளையாவை சேர்ந்தவர் சென்னபசவய்யா, 61. நைஸ் சாலையில் செக்யூரிட்டி அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மகன் அமித், 21. பணிக்கு செல்லாமல், குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.
தினமும் குடிக்கும் மகனுக்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல் நேற்றும் குடித்து விட்டு வந்த மகனுக்கு, தந்தை புத்திமதி சொன்னார். கோபம் அடைந்த அமித், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையை குத்தினார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், சென்னபசவய்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பைதரஹள்ளி போலீசார், அமித்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.