ADDED : நவ 09, 2024 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புட்டேனஹள்ளி: வேலைக்குச் செல்லுமாறு கூறியதால், தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு, புட்டேனஹள்ளி ஸ்ரீ கண்டேஸ்வரா லே- - அவுட்டில் வசித்தவர் ஆயிஷா, 50. இவரது மகன் ஷபியான், 32. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலைக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டியாக சுற்றித்திரிந்தார். தாயிடம் பணம் வாங்கி இஷ்டத்திற்கு செலவு செய்தார்.
நேற்று காலை 10:00 மணியளவில் தாயிடம் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்த தாய், வேலைக்கு செல்லும்படி மகனுக்கு அறிவுரை கூறினார்.
இதனால் தாய், மகன் இடையில் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த மகன், தாயை கத்தியால் குத்திக் கொலை செய்தார். புட்டேனஹள்ளி போலீசார், ஷபியானை கைது செய்தனர்.