UPDATED : பிப் 21, 2025 01:21 AM
ADDED : பிப் 20, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, 78, உடல்நல குறைவால் டில்லிதனியார் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளில் அவர் முழுதாக ஈடுபடுவதில்லை. காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவராக உள்ளார்.நேற்று காலை உடல்நலக் குறைவால் டில்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்த தகவல் இரவு தான் ஊடகங்களுக்கு தெரியவந்தது. மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள அவர் இன்று வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.